
மதுரையில் எஸ்பிகே குழும நிறுவனத்திற்கு சொந்தமான நட்சத்திர விடுதியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. செய்யாத்துரை மகன் ஈஸ்வரன் செய்யாத்துரை வீடு , மற்றும் ஆடம்பர தங்கும் விடுதியில் இரவிலும் விடிய விடிய தொடரும் சோதனை நடைபெற்றது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எஸ்பிகே குழும நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் தொடர்புடைய மதுரை கே.கே.நகர் , கப்பலூர், கல்லணை ஆகிய பகுதிகளில் SPK நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகின்றனர். இதில் 230கோடி மதிப்பில் மதுரை மாட்டுத்தாவணி முதல் கப்பலூர் வரையிலான 4வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கான ஆவணங்கள் குறித்தும் வருமான வரித்துறை தாக்கல் குறித்த ஆவணங்களையும் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் கிடைக்கின்றன. இந்த SPK நிறுவனத்திற்கு சொந்தமான கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆடம்பர தங்குவிடுதியில் 10மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் சாலை ஒப்பந்தம் மற்றும் வங்கி பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்ற 5வருமான வரித்துறை அதிகாரிகள் செய்யாத்துரையின் 3வது மகனான ஈஸ்வரன் செய்யாத்துரை என்பவரது வீட்டிலும், ஆடம்பர விடுதியிலும் இரவிலும விடிய விடிய சோதனை நடத்திவருகின்றனர். மதுரை கே.கே.நகரில் உள்ள SPK குழுமத்திற்கு சொந்தமான ஆடம்பர விடுதியில் அடிக்கடி துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது உறவினர்கள் தங்கி செல்வது குறிப்பிடதக்கது. வருமான வரித்துறை கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் முதலமைச்சர் உறவினர்களும் செய்யாத்துரை மகனின் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருப்பது கண்டுபடிக்கப்பட்டுள்ளதால் சோதனையில் பல்வேறு முக்கிய புள்ளிகளின் பெயர்களும் தொடர்புடையது கண்டறியவும் வாய்ப்பு உள்ளது.