![Sniffer's Retirement Party; Elastic incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/nBbDtLLkcFGio2MGl94QY2LiicaMgttTmREX7V6g8Sw/1661842387/sites/default/files/inline-images/th_3127.jpg)
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும், அதேபோல சென்னை பெங்களூர் ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளை, குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதுடன் அவர்கள் கொண்டுவரும் உடமைகளை மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்வார்கள். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அணி பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக ப்ளான்சி (BLANZY) என்ற மோப்ப நாய் வெகு திறம்பட செயலாற்றி வந்தது.
இந்நிலையில் மோப்ப நாய் ப்ளான்சி இன்று தனது பணியை நிறைவு செய்து ஓய்வு பெற்றது. அதன் ஓய்வு விழா இன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற ப்ளான்சிக்கு விமான நிலைய இயக்குநர் தர்மராஜ், பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார். மேலும் பிளான்சியை கெளரவிக்கும் வகையில் கயிறு இழுக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.