தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்றுமுதல் (12.10.2021) அறிவிக்கப்பட்டுவருகின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோவையில் ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர் மற்றும் தோல்வியால் தரையில் உருண்டு புரண்ட பெண் வேட்பாளர் இதுபோன்ற பல்வேறு வகையான வேடிக்கை நிகழ்வுகளும் அரங்கேறியது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுரங்கம்.
இவரது மகள்கள் மாலா சேகர் (50) மற்றும் உமா கண்ணுரங்கம் (48). சகோதரிகளான இருவரும் கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். காவேரிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாலா சேகர் போட்டியிட்டு, 651 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது தங்கை உமா கண்ணுரங்கம் ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்குப் போட்டியிட்டு 1,972 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.