Skip to main content

கர்நாடக மக்கள் பற்றிய மாய பிம்பம் உடைந்தது! - நெகிழும் சிம்பு

Published on 12/04/2018 | Edited on 13/04/2018

சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு காவிரி விவகாரத்தில் ஒரு புதிய யோசனையை இருமாநில மக்கள் முன்னும் வைத்தார். கர்நாடக மக்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரைக் கொடுத்து பருகச் செய்து தாங்கள் தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம் என்று வெளிப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ எடுத்து 11-ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் ''யுனைட் பார் ஹுமானிட்டி'' ஹேஷ் டேக் மூலம் தெரியப்படுத்துங்கள், அதை வைத்தே புரிந்து கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.  

 

str

 

இதையடுத்து 11-ஆம் தேதியான நேற்று ட்விட்டர் போன்ற பல ஊடகங்களில் கர்நாடக மக்கள் பலர் ''யுனைட் பார் ஹுமானிட்டி'' ஹேஷ் டேக் பயன்படுத்தி பல காணொளிகளை வெளியிட்டு தண்ணீர் தர நினைக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பல கன்னட அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வளர்களும் கூட  இந்த செயலை வரவேற்று சிம்புவை பாராட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து சிம்பு, தன் பேச்சை மதித்து அதை செயல் வடிவில் கொண்டுவந்த கர்நாடக மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு ஆடியோவை பதிவேற்றியுள்ளார்.

 

strstrstr


"ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இவ்வளவு நாட்கள் நடக்கின்ற இந்த காவேரி பிரச்சனையில்  இன்று நேர்மறை எண்ணங்கள் வரத் தொடங்கிருக்கிறது. மனிதாபிமானத்தோடு, நம்பிக்கையோடு மக்கள் இதை ஆதரிச்சு இருக்கீங்க. முதலில் இதற்கு நான் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறேன். கர்நாடகாவில் வாழும், எனக்கு தாயாக, தங்கையாக, நண்பனாக, சகோதரனாக இருக்கும் அனைத்து மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் என் தமிழ்நாட்டு மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல காலங்களாக தமிழர் என்றாலே கர்நாடக மக்கள் வெறுக்கிறார்கள், தண்ணீர் தரமாட்டார்கள், தமிழர்களை அடிகிறார்கள் என ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த பிம்பத்தை அழிக்க நான் எடுத்த புது முயற்சிகு ஆதரவு தந்த கர்நாடக மக்களுக்கு நன்றி. மேலும் நான் நினைத்த இந்த விஷயத்திற்கு கடவுள் இவ்வளவு பெரிய வெற்றி கொடுத்திருக்கிறார் என்றால் இது என் வெற்றியல்ல, மக்களின் வெற்றி.
 

கர்நாடக மக்கள் அங்கு வாழும் தமிழர்களை தாக்கினாலோ அல்லது பேருந்தை அடித்து நொறுக்கினாலோ அதை அதிகம் காட்சிப்படுத்திய மீடியாக்கள் இங்கே ஆயிரம் ஆயிரம். ஆனால் இந்த மனிதாபிமானம் கொண்ட இந்த நிகழ்வை இங்கே மிகக் குறைந்த மீடியாக்களே வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்தே ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இங்குள்ள சில மீடியாவும், அரசியலும் நம் மாநிலங்களின் ஒற்றுமையை விரும்பாமல் நாம் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கின்றன அவர்களுடைய நோக்கமே அதுதான்.இதையெல்லாம் இருமாநில மக்களும் புரிந்துகொண்டுவிட்டனர். நாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை புரியவைத்துவிட்டோம். கடவுள் நம்முடன் இருக்கிறார். இனி மக்களால் நடக்கப்போவதை பாருங்கள்". 

 

str


 

முதலில் இந்த யோசனை கேலியாகப் பார்க்கப்பட்டது. நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்ற நோக்கிலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஓரளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இப்படி செய்வதனால் காவிரி பிரச்சனையில் ஒரு அடி முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்றாலும், இந்த செய்தியால் இரு மாநில மக்களுக்கும் ஒரு நேர்மறை உணர்வு ஏற்படும். அது ஒரு நல்விளைவே.  

 

சார்ந்த செய்திகள்