





கோவையில் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என பாலியல் சிறுபான்மையினர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கூட்டம் நடத்தினர்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் கூடிய பாலியல் சிறுபான்மையினர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் மீண்டும் ஆலையை திறக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை யார் வழங்கியது என்று பகிரங்மாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், காவிரி, சுற்றுச்சூழலை பாதிக்கும் எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழகம் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மௌனமாக இருப்பதாகவும், மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் இதில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர், திருநங்கை கல்கி சுப்ரமணியம் கூறினார்.