இலக்கிய பெருமகனார் சிலம்பொலி செல்லப்பன் (வயது 91) இன்று (6.4.2019) மறைந்தார்.
சிறந்த பேச்சாளராகவும், உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலராகவும், தமிழ் வளர்ச்சி இயக்குநராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் பணியாற்றி, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சிலப்பதிகாரத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பிய தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவெய்தியதை யொட்டி, இலக்கியவாதிகள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன், முரசொலி செல்வம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.,ஆகியோர் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று, தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.