ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கிசூடு காரணமல்ல என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூட்டை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது. மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத்திருந்தது. இந்த வழக்கில் சுற்றுசூழல் சார்ந்த நிபந்தனைகளை மீறியதால் ஆலை மூடப்பட்டது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள நிலையில் தற்போது வரை ஆலை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கில் நீர் நிலைகளை தெரிந்தே ஸ்டெர்லைட் ஆலைமாசுபடுவதை எப்படி அனுமதிக்க முடியும் என தமிழக அரசு எழுப்பியுள்ளது. மேலும் துப்பாக்கி சூட்டால் எழுந்த அழுத்தத்தின் காரணமாகவே ஸ்ட்ரெலைட் ஆலை மூடப்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனம் எழுப்பிய குற்றம்சாட்டை மறுத்த தமிழக அரசு சுற்றுசுழல் சார்ந்த நிபந்தனைகளை மீறியதாலே ஆலை மூடப்பட்டது துப்பாக்கி சூடு காரணமல்ல என விளக்கமளித்துள்ளது.