இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் பேருந்துநிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை துவக்கிவைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக ஆளுநர் இன்று நாமக்கல் வரவிருப்பதை ஒட்டி நாமக்கல் பேருந்துநிலையம் முழுவதும் துப்புரவு பணியாளர்களால் முன்னரே தூய்மைபடுத்தப்பட்டது. ஆனால் விழா ஆரம்பமாகும் நேரத்தில் ஆளுநர் வந்தால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை துப்புரவு செய்து ஆரம்பித்து வைப்பார். ஆனால் பேருந்துநிலையம் முழுவதும் தூய்மையாக இருந்ததால் எந்த குப்பையை அவர் துப்புரவு செய்து ஆரம்பித்து வைப்பார் என குழம்பிய அதிகாரிகள் ஆளுநர் வருவதற்கு முன்பு துப்புரவு பணியாளர்களை கூப்பிட்டு சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் வேண்டுமென்றே குப்பைகளை தூவ சொல்லியுள்ளனர்.
அதன்படி அங்கு வேண்டுமென்றே குப்பைகள் தூவப்பட்டது. ஆனால் அங்குவந்த ஆளுநர் விழாவை ரிப்பன் வெட்டியும், தூய்மை ரதம் எனும் வாகனத்தை கொடியசைத்தும் திறந்தது வைத்தார். ஆனால் தான் அந்த குப்பைகளை சுத்தம் செய்யமாட்டேன் எல்லா இடங்களலும் குப்பை இல்லை பேருந்துநிலையமே தூய்மையாக உள்ளது ஆனால் இங்கு மட்டும் குப்பை போடப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே போடப்பட்டவை எனக்கூறி அகற்றாமல் சென்றுவிட்டார்.