
திருப்பத்தூர் மாவட்டம்.. ஃபெங்ஞல் புயல் காரணமாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தற்போது வரை கனமழை பெய்து வரும் நிலையில், இந்த கனமழையை பயன்படுத்தி வாணியம்பாடியில் உள்ள சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலைத்திற்கு அனுப்பாமல் பாலாற்றில் திறந்து விட்டதால், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு துர்நாற்றத்துடன் அதிக அளவுநுரைப்பொங்கி ஓடுகிறது.
இந்நிலையில், மாராப்பட்டு பாலாற்றில் இன்று வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழை பெய்தால், தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பாலாற்றில் திறந்து விடுவது வாடிக்கையாக இருப்பதாகவும், இதனால் பாலாற்று படுக்கைகள், உள்ள நிலத்தடி நீர்மட்டம் மிகுந்த மோசமான நிலையை எட்டியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.