கோவையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!
கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 537 வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஆத்துப்பாலம் அணைமேடு பகுதியில் நொய்யலின் பிரதான ஒடையான ராஜ வாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு வசிப்பவர்களுக்கு வெள்ளலூர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதைதொடர்ந்து இன்று அப்பகுதியில் உள்ள 537 வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ஆயிரத்து 157 வீடுகள் இடிக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து வீடுகள் இடிக்கும் பணி நடைபெற உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே வீடு இழந்தவராகளில் சுமார் 80 குடும்பத்தினருக்கு வீடுகள் இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை எனவும், மாற்று இடத்தில் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் வீடுகளை இழந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் விடுபட்டவர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- அருள்குமார்