Skip to main content

செப். 9-ல் ஜாக்டோ-ஜியோ தொடர் வேலை நிறுத்தம் திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற் முடிவு

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
செப். 9-ல் ஜாக்டோ-ஜியோ தொடர் வேலை நிறுத்தம் 
திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற் முடிவு 
 


புதுக்கோட்டை, ஆக.16- செப்டம்பர் 9 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில்ல் நடைபெறவுள்ள காலை வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திரளான சத்துணவு ஊழியர்களைப் பங்கேற்பது என புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கக்பட்டது. 
 
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிர்வாகிகள் அன்னபூரணம், ராஜமாணிக்கம், நளாயினி, கணேசன், சிங்காரம், லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, பொருளாளர் துரை.அரங்கசாமி ஆகியோர் அறிக்கை வாசித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், செயலாளர் ஆர்.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் கு.சத்தி சிறப்புரையாற்றினார். 
 
சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் எட்டாவது ஊதியக்குழுவை உடனடியாக அமுல்படுத்தக் கோரியும் 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரியும் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆகஸ்ட் 22 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் செப்டம்பர் 7 அன்று முதல் காலை வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டங்களில் திரளான சத்துணவு ஊழியர்களைப் பங்கேற்கச் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.மலர்விழி வரவேற்க, மாவட்ட துணைத் தலைவர் வி.செல்லத்துரை நன்றி கூறினார்.  
 
-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்