Skip to main content

டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

tamilnadu tasmac shops near bar chennai high court order

 

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட  வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சிலம்பரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபானக் கடைகள் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் நடப்பதாகவும், அவற்றின் அருகில் விபத்துகளும் நடைபெறுவதாகவும்,  மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 

மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

மதுக்கடை பார்களை மூட வேண்டும் என உரிமையாக கோர முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக்கோரி மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்