அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு முறை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நீதிமன்றங்களிலும் ஜாமீன் கோரியும் ஜாமீன் பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. அண்மையில் உடல் நலக் குறைபாடுகளை வைத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றமும் ஜாமீன் தர மறுத்தது. தொடர்ந்து அவ்வப்போது அவருக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கால் மரத்துப் போவதாகத் தொடர்ந்து கூறி வந்ததால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று சிகிச்சை முடிந்து இன்று மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறையிலும் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.