உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படியும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை அறிவித்தது.
ஈரோட்டில் இன்று 6 ந் தேதி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., சி.பி.ஐ.,சி.பி.எம், வி.சி., நாம் தமிழர், தி.க., தி.வி.க. என அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டு அஞ்சல் அட்டையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழக கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும் இனியும் தமிழக கவர்னர் காலம் தாழ்த்தக் கூடாது. ஏழு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். என எழுதி தமிழக கவர்னரின் முகவரிக்கு அனுப்பி வைத்தார்கள். சுமார் 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் ஈரோட்டிலிருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் மாநிலம் முழுக்க நடை பெற உள்ளது. லட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகள் ராஜ்பவன் செல்லவுள்ளது.