Published on 13/04/2022 | Edited on 13/04/2022

திருச்சி கே.கே.நகர் அன்பில் நகர் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 6 யூனிட் மண்ணும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரபாகரன் (28), தனராஜ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய சுரேஷ் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.