Published on 05/12/2020 | Edited on 05/12/2020

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 7-ஆம் தேதி முதல், உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல் இறுதியாண்டு கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஹோட்டல் மேனேஜ்மேண்ட் கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே கல்லூரி செயல்படும். மாணவர்கள் யாருக்கேனும் தொற்று அறிகுறி இருந்தால், மாணவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை. கல்லூரி விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும். கல்லூரி அருகில் மாணவர்களின் உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.