போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் முன்ஜாமீன் பெற்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடந்தது. சென்னை அண்ணா சாலையில் நடந்த இந்த போராட்டத்தின் போது போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டு சீமான் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை ஏற்று சீமானுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜரான சீமான் பிணை தொகையை வழங்கி ஜாமீன் பெற்றார்.
படங்கள். ஸ்டாலின்