ரயில்வே பணியில் 90% வட மாநிலத்தவர்களின் நியமனத்தை கண்டித் போராட்டம் நடத்த இருப்பதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு ராமகிருட்டிணன் பேட்டி
தென்னக ரயில்வேயில் உள்ள கடைநிலை ஊழியர்களுக்கான கேட் கீப்பர், கேங் மேன், சிக்னல் ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. மதுரை மண்டலத்தில் நடைபெற்ற தேர்வில் 572 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 11பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வட மாநிலத்தவர்கள். இதே போல கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருச்சி மண்டலத்தில் நடைபெற்ற தேர்வில் 1200 பேர் தேர்வாகியிருந்தனர். இதில் 1050 வட மாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக்த்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், தென்னக ரயில்வேயின் சார்பில் காலி பணியிடங்களை நிரம்பும்போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் தேர்வை, மாநில மொழிகளில் கட்டாயம் நடத்தினால் மட்டுமே அந்தந்த மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும் என வலியுறுத்தினர். வட மாநிலத்தவர்கள் எளிதாக மலை வாழ் மக்கள் என சான்றிதழை பெற்று , ரயில்வேயில் வேலை வாய்ப்பை பெற்று விடுகின்றனர் என குற்றம் சாட்டினார்.
இதனால் ஹிந்தி தெரியாத மாநிலத்தில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மின்சாரத்துறையில் உதவி பொறியாளர் பணியினை வட மாநிலத்தவர்களுக்கு வழங்கியதும் கண்டிக்கத்தக்கது என்றார். தமிழக அமைச்சர் ஒருவர் தேர்வு எழுதும் தமிழர்களுக்கு தகுதி இல்லாததால்தான் வேலை கிடைக்கவில்லை எனக்கூறி இருப்பது வன்மையாக கண்டிப்பதாகவும், கடை நிலை ஊழியர்களுக்கான தேர்வில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி , வருகின்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி மதுரை ரயில்வே கோட்டத்தை தோழமை கட்சிகளுடன் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.