Published on 06/12/2021 | Edited on 06/12/2021

அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் ம. சரவணன் தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி ஈபி ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதுசமயம் திருச்சி மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் வக்கீல் செந்தில்நாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.