Skip to main content

'இரண்டாவது முறை இந்திய வானிலை ஆய்வு மையம் தோற்றுவிட்டது'-அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு

Published on 01/08/2024 | Edited on 01/08/2024
nn


கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ''இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் ஒருமுறை தோல்வியுற்றிருக்கிறது என்பதை நான் வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன். நம்ம தமிழ்நாட்டில் பெரிய பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் இதே கருத்தை நான் பதிவு செய்திருந்தேன். இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அவர்களுடைய செயல்பாடுகளை சரி செய்ய வேண்டும். நல்ல தொழில்நுட்பத்துடன் செயல்பட வேண்டும்.

நேற்றைய தினம் கேரளாவின் முதல்வர் அந்த துறையின் சார்பில் வெளியிட்ட அறிவிப்புகள், ஜியாலஜி துறை வெளியிட்ட அறிவிப்புகள், மண்சரிவு வராமல் தடுப்பதற்கான துறை கொடுத்த அறிவிப்புகள் எல்லாமே போதிய அளவிற்கு இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே ஒன்றிய அரசு உடனடியாக அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இயங்குகின்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இப்படிப்பட்ட விஷயங்களை நாம் ஃபோர் காஸ்ட் பண்ண முடியும். ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது குற்றச்சாட்டு சொல்வதை தவிர்த்து விட்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தை சீர் செய்ய வேண்டும். அதி நவீன தொழில்நுட்பங்களோடு மக்களுக்கு விரைந்து தெளிவான தகவல்களை  முன்கூட்டியே கொடுக்கக்கூடிய நடைமுறைகள் வரவேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்