Skip to main content

இரண்டாம் கட்ட கல்வி விழா- அதிகாலையிலேயே புறப்பட்ட விஜய்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Second phase of education ceremony- Vijay started to leave early in the morning

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவிற்காக தற்பொழுது திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நடிகர் விஜய் திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு அதிகாலையிலேயே சென்றுள்ளார். மற்ற நேரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையிலேயே அவர் மண்டபத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 725 மாணவ -மாணவிகள் உட்பட 3,500 பேர் இன்றைய பாராட்டு நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இரண்டாம் கட்ட நிகழ்வில் பேச மாட்டேன் என விஜய் அன்று கூறியிருந்த நிலையில் திடீர் டிவிஸ்ட்டாக இன்று மாணவர்கள் மத்தியில் விஜய் பேசப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குழந்தையாக மாறிய விஜய்; சிறுமி செய்த செயலுக்கு விஜய்யின் ரியாக்‌ஷன்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Vijay's reaction to the girl's act in function

இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, விஜய் சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார். 

இதில் பரிசு பெற்ற மாணவியின் குடும்பத்தில் வந்த சிறுமி, முட்டி போட்டுக்கொண்டு விஜய்யிடம் பக்கொடுக்க காத்திருந்தார். இதனைப் பார்த்த விஜய், சில வினாடிகள், அந்தச் சிறுமியை நேருக்கு நேர் பார்த்தார். இதனையடுத்து, விஜய்யும் முட்டிப் போட்டுக்கொண்டு அந்தச் சிறுமி கொடுத்தப் பூவை வாங்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

“டாஸ்மாக் ஓபன் பண்ணி குடிக்கிறவங்கள என்கரேஜ் பண்றவங்க மத்தியில...” - மாணவியின் அசத்தல் பேச்சு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Student's amazing speech at vijay Award ceremony

இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கினார். 

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவண்ணாமலை,ட் திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பரிசு பெற்ற மாணவி ஒருவர் பேசுகையில், “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம ஒரு விஷயத்தை செய்யும்போது அதுக்கான பாராட்டு நமக்கு கிடைக்கிறப்ப தான் அதோட வேலியு (Value) தெரியுது. வாழ்க்கையில இன்னும் நிறைய செய்யனும்னு ஒரு மோட்டிவேஷன் (Motivation) கிடைக்குது. நம்ம மாநிலத்துல டாஸ்மாக் ஓபன் பண்ணி குடிக்கிறவங்கள என்கரேஜ் (Encourage) பண்றவங்களுக்கு மத்தில படிக்கிறவங்கள என்கரேஜ் பண்ற ஒரே கழகம்.. அது நம்ம தமிழக வெற்றிக் கழகம் தான். இதுதான் நமக்கு தேவையான மாற்றம். நம்ம தலைமுறைக்கு, ட்ரக்ஸ் (Drugs) இல்லாத சமூகத்தையும், எஜுகேஷனுக்கு (Education) முக்கியம் தர சமூகத்தையும் நம்ம விஜய் அண்ணா கொண்டு வருவாருனு நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கு. கண்டிப்பா அந்த மாற்றத்தை கொண்டு வருவீங்கனு நம்புறோம்” என்று பேசினார்.