தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு (வரும் 23 ஆம் தேதி வரை) கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இறைச்சி மீன் கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அனுமதியின்றி இயங்கிய மதுபான கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் அனுமதியின்றி மதுபான கூடம் இயங்கி வருவதாக தகவல் வெளியான நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் சோதனை நடத்தினார். இந்நிலையில் மதுபான கூட்டத்திற்கு சீல் வைக்கபட்டதோடு, அந்த மதுபான கூடத்தில் இருந்து 150 க்கும் மேற்பட்ட போலி மதுபாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.