Skip to main content

“காந்தியா? கோட்சேவா?”  கேட்கிறார் மாணிக்கம் தாகூர்! -விருதுநகர் தொகுதி வேட்புமனு தாக்கல் விறுவிறு!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சிவஞானத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் கமிட்டி செயலர் சஞ்சய்தத், திமுக வடக்கு மா.செ. தங்கம் தென்னரசு, விருதுநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மற்றும் மதுரை தெற்கு மா.செ.மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

c

 

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர்,  “இந்தியா என்ற எண்ணமே இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. ஒருமைப்பாட்டைக் குலைக்கும் கும்பலிடம் இந்தியா சிக்கியிருக்கிறது. ஒருபுறம் காந்தியின் கொள்கை; மறுபுறம் கோட்சேயின் கொள்கை. இந்த இரண்டுக்கும் இடையில் நடக்கின்ற தேர்தல் இது. மக்கள் விரோத செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி தலைமையில் அரங்கேறியிருக்கின்றன.

 

ஐந்து பேருக்கு மட்டுமே பாதுகாப்பாகச் செயல்படும் மோடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் இது. நான்கு மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடியாகும் என்று அறிவித்திருக்கிறார் ராகுல்காந்தி.

 

இதுவரையிலும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் விவசாயக் கடன் தள்ளுபடியாகும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. கொண்டுவந்து சிறுதொழில்களைப் பாதுகாப்போம். கைத்தறி, பட்டாசு போன்ற தொழில்கள் மோசமான நிலைமையில் உள்ளன.  விருதுநகர் மாவட்டம் தொழில் மாவட்டம். இன்று தலைகுனிந்து நிற்கும் நிலைக்குக் கொண்டு விட்டார்கள் மோடியும் எடப்பாடியும்.  மோடியின் குற்றத்தைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க மாட்டோம். முக்கிய திட்டங்களை முன்வைத்தே மக்களிடம் வாக்கு சேகரிப்போம்.” என்றார். 

 

a


மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்திடம் விருதுநகர் தொகுதி அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனியசாமி ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 

 

m

 
சாத்தூரிலும்  இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.சுப்பிரமணியன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 


 

a

 

சார்ந்த செய்திகள்