Skip to main content

சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கக்கோரிய மனு தள்ளுபடி

Published on 31/10/2018 | Edited on 01/11/2018
su

 

முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரராவார். அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில்,  ஆபாசபட நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட கோரிய வழக்கில் மனுதாரர் மனுவினை வாபஸ் பெற்றார்.  இதையடுத்து மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,   "முதலாவது ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி. சிறந்த பெண் போர் வீரர். கணவரின் இறப்புக்கு பிறகு வீரமாதேவி,  சதி எனும் உடன்கட்டை ஏறினார். அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் வீரமாதேவி என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படவுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.


இந்தப்படத்தில் வீரமாதேவி கதாபாத்திரத்தில் பிரபல ஆபாசபட நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார்.  சன்னிலியோனின் ஆபாச படம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. இப்போதும் இணையதளத்தில் அவரது ஆபாசன படங்கள் உள்ளன. ஆபாச படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆபாச பட நடிகை விருது சில ஆண்டுக்கு முன்பு சன்னிலியோனுக்கு வழங்கப்பட்டது.


இவர் வீரமாதேவியாக நடிப்பது வீரமாதேவியை அவமானம் செய்வதாகும். முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், அவரது மனைவி வீரமாதேவிக்கும் தமிழகத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.


வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் சன்னிலியோன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை  படப்பிடிப்பை நிறுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறினார். பின்னர் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சன்னி லியோன் நிகழ்ச்சியால் புதுவையில் வெடித்த போராட்டம்...

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

 protest to Sunny Leone dance puducherry

 

புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டை  கொண்டாட அரசு சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கலர் பிலிம் பேக்டரி சார்பில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று (30.12.2021) முதல் (1.12.2021) புத்தாண்டு வரை தொடர்ந்து மூன்று நாட்கள் பழைய துறைமுகத்தில் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

 

ad

 

இந்நிலையில் சன்னி லியோனின் நடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் தளம் என்ற அமைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் சன்னி லியோனின் பேனர்களையும் போஸ்டர்களையும் கிழித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படவே, காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு கிளம்பியது. 

 

இதனைத்தொடர்ந்து பேசிய தமிழர் தளம் அமைப்பின் தலைவர் அழகர்,"புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரத்தை சீரழிக்கும் முதல்வர் மற்றும் ஆளுநரை கண்டித்து போராட்டங்கள் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.