Skip to main content

கடல் முகத்துவாரம் தூர்வாரும் பணி மீனவர்கள் மகிழ்ச்சி!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை, சின்னவாய்க்கால், பட்டறையடி, பிள்ளுமேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சின்னவாய்க்கால் முகத்துவாரம் வழியே படகில் சென்று மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முகத்துவாரம் மணல்களால் மூடப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது வந்தது.

Sea Estuary  Dredged cuddalore fishermen's happy


இதனை தொடர்ந்து, முகத்துவாரத்தைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென மீனவர்களின் பிரதிநிதிகள்  சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முகத்துவாரத்தை  இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை புதன்கிழமை கடல் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் கட்சியினருடன்  படகில் சென்று எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடற்கரை வரை படகுகள் சென்று வர ஏதுவாக ஆழமான அளவுக்கு தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்