வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவாகி 4 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் ஜனவரி 14ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவுள்ள நிலோபர்கபில் வாணியம்பாடி நகரில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடி ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் பாழடைந்துள்ள பெண்கள் பூங்கா புதுப்பிக்கவும், நீண்டநாள் கோரிக்கையான நியூடவுன் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும், நியூடவுன் பிள்ளையார் கோயில் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், நகராட்சிக்கு வருவாய் பெரும் வகையில் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் நீலோபர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சில நகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள இடம் கடந்த பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்து வருகிறது என்றும் அதை எப்படி கையகப்படுத்த நினைக்கலாம் என அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பைபாஸ் சாலையில் 4. கோடி 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு அதிமுகவின் அரசியல் ஈகோ காரணங்களால் பயன்பாடுயின்றி உள்ள கூடுதல் பேருந்து நிலையம் கட்டிடத்தை பார்வையிட்டார். அந்த கட்டிடத்தில் மாடு அறுக்கும் தொட்டி மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை நிலையம் அல்லது காய்கறி மற்றும் மீன் மார்கெட் கொண்டு வரலாமா என ஆலோசனை நடத்தினார்.
பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி தங்கும் விடுதி, பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகம், வார சந்தை மைதானம், அம்மா உணவகம், தாய்செய் விடுதி, சின்னாறு பகுதி மற்றும் ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் புதியதாக கட்டி வரும் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் உட்பட பல வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.