Skip to main content

குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை அடித்து சாக்கில் மூட்டைகட்டி சாக்கடையில் வீசிய மனைவி!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

புதுச்சேரியில் மது அருந்திவிட்டு தினமும் அடித்து துன்புறுத்திய கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி அவருடைய சகோதரியுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்து சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 The wife killed her husband in Puducherry...police investigation

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் அவரை கொலை செய்து வீசிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

 

 The wife killed her husband in Puducherry...police investigation

 

murder

 

விசாரணையில் அவர் நெல்லித்தோப்பு வினோபா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஸ்டெல்லாவை அழைத்து விசாரித்த பொழுது அவர் குடிபோதையில் கால்வாயில் விழுந்து விழுந்து உயிரிழந்த இருப்பார் என்றும், தற்கொலை செய்திருப்பார் என்றும் மனைவி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

 

murder

 

அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி மூட்டை சாக்குகள் சிதறிக்கிடந்ததை கண்ட போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்டு உயிரிழந்த கமலகண்ணன் கழுத்து இறுக்கப்பட்டது தெரியவந்தது. அதேபோல் பெண்ணின் கால்களால் முகம் மிதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுவற்றில் தள்ளவிட்டு அடித்து கழுத்து எலும்பை முறித்து கொலை செய்ததாக ஸ்டெல்லா ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் நடந்த கொலையையும், சடலத்தையும் மறைக்க அவரது தங்கையான ஜெரினாவிடான் உதவிகோரியுள்ளார்.

 

murder

 

ஆனால் ஜெரினாவோ அவரது  ஆண் நண்பரான பிள்ளைச்சாவடியை சேர்ந்த தமிழ் மணி என்பவரை வரவழைத்துள்ளார். அப்போது சடலத்தை மறைக்க வீட்டில் உள்ள அரிசி முட்டையினை எடுத்து சடலத்தை கழுத்து பகுதிகளை முறித்து மூட்டைகட்டி சாக்கடையில் எறித்துள்ளனர்.

 

 

இந்த வழக்கில் ஸ்டெல்லா,ஜெரினா,தமிழ் மணி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். தமிழ் மணி ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று அண்மையில் பரோலில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்