பள்ளியில் படிக்கும் தனது வகுப்பு தோழிகள் புறக்கணித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மெயின் ரோடு அருகே இருக்கும் பள்ளி விடுதியில் தங்கி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் பள்ளி விடுதிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றியுள்ளனர். பின்னர் மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது மாணவி சுகன்யா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பார்த்த போலீஸாருக்கும், பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவிகளுக்கு பெரிய அதிர்ச்சி செய்தி காத்திருந்துள்ளது. அந்த கடிதத்தில் நான் மூன்று வருடங்களுக்கு முன் செய்த தவறுகளுக்கு இப்ப வரை தண்டனை அனுபவித்து வருகிறேன். யாரும் என்னை மன்னிக்கவில்லை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் என் வகுப்பு மாணவிகள் கூட என்னிடம் பேசாமல் புறக்கணித்து வருகிறார்கள். இதனால் எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. என்னால் பன்னிரண்டாம் வகுப்பை இதே பள்ளியில் தொடர முடியாது. இதனால் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.' என எழுதியுள்ளார்.
பின்பு இது குறித்து சக மாணவிகளிடம் கேட்ட போது மூன்றாண்டுகளுக்கு முன்பு, வேறொரு மாணவியின் தின்பண்டத்தை திருடி சாப்பிட்டதால், மூத்த மாணவிகள் 48 பேர் அவரை அடித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது இருந்து சுகன்யாவிடம் யாரும் சரியாக பேசுவதில்லை. அவளை இந்த சம்பவத்தை வைத்து அடிக்கடி கூட படிக்கும் மாணவிகள் சுகன்யாவை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதோடு அவமானம் படுத்தியதாக கூறுகின்றனர்.