Published on 16/08/2020 | Edited on 17/08/2020

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சில தினங்களாக அதிர்ச்சியான தகவல் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. அவரது மகன் எஸ்பிபி சரணும் இதுதொடர்பாக விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் மாலையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரணிடம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.