கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே சோழத்தரத்தில் கடலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ லாசர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைத்தலைவர்கள் துரைராஜ், வாசு, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார்கள்.
கடலூர் மாவட்டத்தில் முழுசுகாதார திட்டத்தின்கீழ், தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. அதில் 40 லட்சம் அளவிற்கு காட்டுமன்னார்குடி வட்டத்தில் நடைபெற்றுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்தி பேரூராட்சி பகுதிக்கு வழங்க வேண்டும். பலவகையான புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்றிடம் வழங்கி குடிமைப்பட்டா வழங்க வேண்டும். மனைப்பட்டா இல்லாதவர்களை கணக்கெடுத்து மனைப்பட்டா வழங்க வேண்டும் பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் கிராம பஞ்சாயத்தில் வேலைபார்க்கும் தூய்மை காவலர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
2015, 16 ஆம் ஆண்டில், மாவட்டத்தின் சமூகத் தணிக்கை நடைபெற்ற பஞ்சாயத்துக்களின் விவரப்பட்டியலை வெளியிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சோழதரம் கடைவீதி பகுதியில் காட்டுமன்னார்குடி வட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிதி அளிப்பு பொதுக்கூட்டத்தில் திருமுட்டம், சோழதரம் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைசார்பில் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் லாசரிடம் ரூ 30 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்குடி வட்ட செயலாளர் இளங்கோவன் மாவட்ட குழு உறுப்பினர்கள் வெற்றி வீரன், வாஞ்சிநாதன், தமிழ் அரசன், வைத்தியலிங்கம், பன்னீர், சுப்பிரமணியன் நமச்சிவாயம், அன்புமணி, கே பி குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.