Skip to main content

மாவட்ட தலைநகரங்களில் சத்தியாகிரக போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

'Satyagraha struggle in district capitals' - K.S.azhagiri announcement

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 

இந்நிலையில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன்பு ஒருநாள் அடையாள சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்