Skip to main content

அமைச்சர் பெருமை பேசி என்ன பயன்?  பிரசவத்தில் குழந்தைகள் உயிர் போகிறதே? -ஒரு கிராமத்தின் ஆதங்கம்!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 


உயிர்கள் விஷயத்தில்  அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும்  அலட்சியமாக நடந்துகொள்கின்றனர் என்பது தமிழகத்தில் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையின் பெயர் அல்லோகல்லோலப்பட்டது. இதுவும் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம்தான். அதனால்,  சாத்தூரை அடுத்துள்ள ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  

 

s

 

ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 7 மணிக்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார் முனீஸ்வரி. நண்பகல் 12 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு,  குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றும் மதியம் 1 மணிக்கெல்லாம் குழந்தை பிறந்துவிடும் என்று அரசு மருத்துவர் தெரிவித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

 

s

 

அதனால், மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்களே பிரசவம் பார்த்தி ருக்கின்றனர். குழந்தை இறந்துவிட்டது. அதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரியின் உறவினர்கள், ஸ்கேன் செய்தபோது ஆரோக்கியமாக இருந்த குழந்தை, பிரசவம் பார்த்த செவிலியர்களின் கவனக்குறைவால்தான் இறந்தது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.  

 

s

 

குழந்தை இறந்தது குறித்து முனீஸ்வரியின் உறவினர் வெயில்முத்து “இந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் 12 மணிக்கு வந்து பார்த்துட்டு 12.10-க்கெல்லாம் வீட்டுக்கு போயிட்டாங்க. முனீஸ்வரிக்கு பிரசவம் பார்த்தப்ப டாக்டர் இல்ல. நர்ஸ்தான் பிரசவம் பார்த்தாங்க. டாக்டருங்க பெயரளவுக்குத்தான் வர்றாங்க. போறாங்க. அரை மணி நேரத்துக்கு மேல இங்கே இருக்கிறதில்ல. இதே மாதிரி  எங்க ஊருலயும் (மஞ்ச ஓடைப்பட்டி)  4 குழந்தைங்க செத்துப்போச்சு.

 

s

 

  அந்த 4 குழந்தைங்க உசிர திருப்பிக்கொடுக்க முடியுமா? டாக்டர் மீதும் நர்ஸ் மீதும் நடவடிக்கை எடுக்கணும். இனியும் இந்த மாதிரி பிரச்சனை வரக்கூடாது. கோவில்பட்டி மலர் ஸ்கேன்லதான் ஸ்கேன் எடுக்கணும். இல்லைன்னா பிரசவம் பார்க்க முடியாதுன்னு சொல்லுறாங்க. கோவில்பட்டியில் இருக்கிற மலர் ஸ்கேனுக்கும் ஏழாயிரம்பண்ணையில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எதுவும் லிங்க் இருக்கா? இதையெல்லாம் துறை ரீதியா விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்.” என்றார் ஆதங்கத்துடன். 

 

“வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தமிழக அரசின் லட்சியம்” என்று பெருமிதமாகப் பேசுகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சர் பேச்சில் காட்டும் வேகத்தை,  சுகாதாரத்துறை செயலில் காட்டுவதில்லை என்பதே நிதர்சனம். 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.