Skip to main content

ரூபாய் 300 கோடி சசிகலா சொத்து முடக்கம்... -நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

sasikala properties assets income tax notice

 

 

போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை.

 

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா பினாமி பெயரில் வாங்கிய 65 சொத்துகளை வருமான வரித்துறையின் பினாமி தடுப்பு பிரிவு முடக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வாங்கப்பட்ட 65 சொத்துகள் 200 ஏக்கரில் பரவியிருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு 300 கோடி ரூபாயாகும். ஸ்ரீ ஹரிச்சந்தனா  என்ற நிறுவனத்தின் ஷெல் கம்பெனி மூலமாக இந்த சொத்துகள் வாங்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது. எந்தவித பணப் பரிமாற்றமும் நடைபெறாத அந்த கம்பெனியில், சசிகலா 1,600 கோடி ரூபாய்க்கு பினாமி பரிவர்த்தனை செய்து இருக்கிறார் என்றும், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை பயன்படுத்தி சொத்துகள் வாங்கி இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

sasikala properties assets income tax notice

 

இந்த குற்றச்சாட்டுக்கள் மீது நடைபெற்ற விசாரணை அடிப்படையில் ஷெல் கம்பெனியின் மூலம் பணத்தை முதலீடு செய்து சசிகலா சொத்துகளை வாங்கி இருப்பதாகவும், குறிப்பாக போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் உட்பட 65 சொத்துகளை வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது. 

 

sasikala properties assets income tax notice

 

இந்த நிலையில், முடக்கப்பட்ட சசிகலாவின் ரூபாய் 300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது. சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில், சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 90 நாட்களுக்குள் சொத்து குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என வருமான வரித்துறை ஒட்டியுள்ள நோட்டீஸில் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்