Published on 07/09/2021 | Edited on 08/09/2021

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் பாடலாசிரியர் புலமைப்பித்தனை ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப்பித்தன், சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண மருத்துவமனை சென்ற சசிகலா, அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "‘இதயக்கனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நீங்கள் நல்லா இருக்க வேண்டும்...’ என்ற பாடலின் மூலம் அதிமுகவை பட்டித்தொட்டிவரை கொண்டு செல்ல தோள் தொடுத்தவர் புலமைப்பித்தன்" என கூறினார்.