Published on 22/08/2018 | Edited on 22/08/2018
![islaam](http://image.nakkheeran.in/cdn/farfuture/DEWu20hH2eLcWrERCAzfkafvUraXgvreNJJ7hqg7GWc/1534928570/sites/default/files/inline-images/ghnggh.jpg)
நாடுமுழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. புத்தாடை உடுத்தி ஏழை எளிய மக்களுக்கு இறைச்சியை தானம் செய்யும் நாளாக இஸ்லாமிய சகோதரர்கள் கொண்டாடிவருகின்றனர். பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களால் சிறப்புத்தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
அதேபோல் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அரசியல் தலைவர்களும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.