சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் ஜீவஜோதி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய அவரது கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மாடிப்படிகளில் ஏறமுடியாததால் வேனிலிருந்தே சரணடைந்திருந்தார்.இந்த வழக்கில் ராஜகோபாலனின் உதவியாளரான ஜனார்த்தன் மற்றும் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டநிலையில் ராஜகோபால் உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கே மருத்துவவசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூற ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.