Published on 02/01/2023 | Edited on 02/01/2023

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் தூய்மை பணியாளராகப் பணியாற்றி வந்த லலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தூய்மை பணியின் போது ஏற்பட்ட கிருமித் தொற்றினால் தான் லலிதா உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தாகக் கூறி தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பாதிரிக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிக்காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.