Skip to main content

மணல் கடத்தல் புகார்... முன்னாள் திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலை!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

sand

 

மணல் கடத்தல் வாகனத்தை விடுவித்ததற்காக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், மணல் கடத்தல் தொடர்பாக நீக்கப்பட்ட திமுக நிர்வாகியைப் போலீசார் தேடிவருகின்றனர்.

 

திருச்சியில் முத்தப்புடையான்பட்டியில் மணல் கடத்தல் சம்பவத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை மணப்பாறை காவல் ஆய்வாளர் அன்பழகன்  விடுவித்ததற்காக அவரை சஸ்பெண்ட் செய்து திருச்சி டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை விடுவிக்க வேண்டும் என போலீசாரை ஆரோக்கியசாமி என்பவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. திமுக நிர்வாகியாக இருந்த ஆரோக்கியசாமி மீது மணல் கடத்தல் புகார்கள் எழுந்த நிலையில், ஏற்கனவே அவரை திமுக சஸ்பெண்ட் செய்திருந்தது.

 

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திகேயன், பவுல்சேகர், மனோகர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டு போலீசாரை மிரட்டிய புகாரில் திமுக முன்னாள் நிர்வாகி ஆரோக்கியசாமியை போலீசார் தேடிவருகின்றனர் .

 

 

சார்ந்த செய்திகள்