Skip to main content

சிதம்பரம் அருகே மணல் குவாரி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
சிதம்பரம் அருகே மணல் குவாரி கொலை வழக்கில் 
7 பேருக்கு ஆயுள் தண்டனை

சிதம்பரம் அருகே உள்ள ஆயிபேட்டை கிராமத்தில் கடந்த 13.03 2011 அன்று மணல்குவாரியில் ஏற்பட்ட பிரச்சினையில் அதே ஊரை சேர்ந்த குணசேகரன் மகன் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஒரத்தூர் போலீசார் அதே ஊரை சேர்ந்த ராஜாங்கம் மகன்கள் ஆறுமுகம், கோபாலகிருஷ்ணன், சக்திவேல், சண்முகம் மகன் அழகிரி, ராமலிங்கம் மகன் ஜோதிலிங்கம், குமார் மகன் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் மகன் சுரேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. புதனன்று வழக்கை விசாரித்த நீதிபதி இளவரன், குற்றவாளிகள் ஆறுமுகம், கோபாலகிருஷ்ணன், சக்திவேல், அழகிரி, ஜோதிலிங்கம், வெங்கடேசன், சுரேஷ் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையொடுத்து 7 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்