Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரிப்பு!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிப்பு. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு 500 கனஅடியில் இருந்து 22,500 கனஅடியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 

salem mettur dam water level raised

 

அதேபோல் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் வினாடிக்கு 350 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது. தொடர்மழை காரணமாக ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்