Published on 11/10/2019 | Edited on 11/10/2019
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,672 கனஅடியிலிருந்து 13,404 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.24 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 87.60 டிஎம்சியாக இருக்கிறது.