Published on 30/10/2020 | Edited on 30/10/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று (30/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,333 கனஅடியில் இருந்து 7,683 கனஅடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.42 அடியாகவும், நீர் இருப்பு 65.38 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்குக் கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 7,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.