Skip to main content

சேலத்தில் பிப். 8ம் தேதி மக்கள் நீதிமன்றம்; நீதிபதி அழைப்பு!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்வதற்காக, வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. 

salem district court lok adalat feb 8th chief judge announced

மக்கள் நீதிமன்றம் மூலம் பாகப்பிரிவினை வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீடு கோரும் வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், குடும்ப விவகார வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகளுக்கு தீர்வு காணலாம். 


எனவே, பொதுமக்கள் யாருக்கேனும் நீதிமன்றத்தில் மேற்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும்பட்சத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தெரிவித்தால், உடனடியாக சட்ட அறிவிப்பு இருதரப்புக்கும் அனுப்பப்பட்டு, சட்ட ரீதியான தீர்வு காணப்படும். இவ்வாறு, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமாவளவன் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி; மேல்முறையீடு செய்ய பாமக முடிவு!      

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Defamation case against Thirumavalavan dismissed

 

பாமக தரப்பில் திருமாவளவன் எம்.பி  மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி, சேலம் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது.    

 

வன்னியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி, சேலம் 4வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் இமயவரம்பன் மனுதாக்கல் செய்தார்.  

 

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, குணசேகர், சிவா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஐயப்பமணி, பகத்சிங் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கு ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், திருமாவளவன் மீதான அவதூறு  வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

 

வழக்கு விசாரணைக்கு வந்ததால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்து இருந்தனர்.  இதனால் அந்த வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கார்த்தி தரப்பில் கூறப்பட்டது.  

 

 

Next Story

தேசிய லோக் அதாலத்; திருச்சியில் 1192 வழக்குகளுக்கு தீர்வு

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

national lok adalat trichy 1192 case solved 

 

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்தியபிரியா, இ.கா.ப. பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திடவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், வடக்கு மற்றும் தெற்கு சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

 

அதன்படி, கடந்த 13.05.2023 ஆம் தேதி திருச்சி மாநகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத் நீதிமன்றம் மூலம் திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த தீர்வு காணக்கூடிய 1192 உள்ளூர் மற்றும் சிறப்பு சட்ட (Special & Local Law) வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் கண்டோன்மெண்ட் சரகத்தில் 221 வழக்குகளும், பொன்மலை சரகத்தில் 22 வழக்குகளும், கே.கே.நகர் சரகத்தில் 80 வழக்குகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 65 வழக்குகளும், தில்லைநகர் சரகத்தில் 520 வழக்குகளும், காந்தி மார்க்கெட் சரகத்தில் 67 வழக்குகளும், போக்குவரத்து சம்மந்தமாக 33 வழக்குகளும், மதுவிலக்கு பிரிவில் 184 வழக்குகள் என மொத்தம் 1192 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 6 லட்சத்து 53 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

திருச்சி மாநகரத்தில் இதுபோன்று லோக் அதாலத் நடைபெறும் போது தீர்வு காணக்கூடிய வழக்குகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்துக்கொண்டார்.