Published on 13/09/2020 | Edited on 13/09/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று (13/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 10,068 கனஅடியில் இருந்து 8,575 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.24 அடியாகவும், நீர்இருப்பு 55.24 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 9,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.