கேரளா மாநிலம் திருவனந்தபுரம் எம்பி ஆக இருப்பவா் சசிதரூா். இவா் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய மந்திாியாகவும் இருந்துள்ளாா். தற்போது திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் களத்தில் உள்ளாா்.
இந்த நிலையில் நேற்று சசிதரூா் திருவனந்தபுரம் வழுதக்காடு பகுதியில் தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டியிருந்ததாா். அப்போது அந்த பகுதியில் உள்ள காந்தாாி தேவி கோவிலில் காங்கிரஸ் பிரமுகா் ஒருவா் சசிதரூாின் எடைக்கு எடை வாழைப்பழம் துலாபாரம் மூலம் கொடுப்பதாக நோ்த்தி கடன் போட்டியிருந்தாா்.
அதன் படி இன்று அந்த பகுதியில் பிரச்சாரத்துக்கு வந்த சசிதரூரை அழைத்து கோவிலுக்கு சென்றனா். பின்னா் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பதற்காக சசி தரூரை தராசில் உட்கார வைத்தனா். தராசின் ஓரு பக்கத்தில் வாழை பழங்களை குலையாக அடுக்கி வைத்தனா். அந்த நேரத்தில் இருபக்கம் எடையுடன் தொங்கி கொண்டியிருந்த தராசு திடீரென்று அறுந்து சசிதரூாின் தலையில் விழுந்தது. இதில் சசி தரூாின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனால் மயக்கமடைந்த அவரை உடனடியாக அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.