Skip to main content

 எட்டுவழிச்சாலை விவகாரம் - அன்புமணிக்கு சவால் விட்ட விவசாயி கைது

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 

சேலம் டூ சென்னை இடையிலான எட்டுவழிச்சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென பலரும் வழக்கு தொடுத்திருந்தனர். அதில் முக்கியமானவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவரது நிலம் 8 வழிச்சாலைக்காக எடுக்கப்படுவதால் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார். அவர் வழக்கு முக்கியமானதாக இருந்தது.

 

அ

 

வழக்கு நடந்து வந்தது. 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். தீர்ப்பு வெளிவந்ததும், இந்த தீர்ப்பு எங்கள் வழக்கால் தான் வந்தது என பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அன்புமணியும், அவரது கட்சியினரும் பிரச்சாரம் செய்தனர்.


என் வழக்குதான் முக்கியமானது, தீர்ப்பின் நகலில் பாருங்கள், என் பெயர் தான் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட அன்புமணி பெயரோ, அவரது வழக்கறிஞர் பெயரோ கிடையாது. யார் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்தது என்பதை அன்புமணி என்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விட்டார்.


இந்த சவாலை கேட்டு ஆத்திரமான பாமக நிர்வாகியான சத்தியமூா்த்தி என்பவர், கிருஷ்ணமூர்த்தியை தொலைபேசியிலும், நேரிலும் சென்று மிரட்டியுள்ளார். அந்த வழக்கு மற்றும் தீர்ப்பு தொடர்பாக 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகியான பழனியப்பன் என்பவரின் மகனும் விவசாயியுமான சந்தோஷ், தொடர்ச்சியாக சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இதில் அன்புமணி ஏமாற்றுகிறார் என்பதையும், அதிமுக – பாமக நடகத்தையும் அதில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதில் கோபமான பாமக நிர்வாகிகள், சந்தோஷ் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் தர, அதிமுக – பாமக கூட்டணியில் உள்ளதால் அதிகாரத்தில் உள்ள அதிமுக தலைமையின் உத்தரவால் சந்தோஷ் கைது செய்யப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளாராம். இந்த தகவல் பரவி தற்போது 8 வழிச்சாலைக்காக போராடிவரும் விவசாயிகளையும், அமைப்புகளையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

சார்ந்த செய்திகள்

 
News Hub