கிராமிய அஞ்சலக ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்
கிராமிய அஞ்சலக ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ந் தேதி முதல் கிராம அஞ்சகங்களை திறக்காமல் தொடர் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராமங்களுக்காண அஞ்சல் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்ட நாட்களில் தலைமை அஞ்சகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அஞ்சலகம் முன்பு சுற்றுவட்டார கிராம அஞ்சலக ஊழியர்கள் திரண்டு அரைநிர்வானமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினார்கள்.
எங்கள் கோரிக்கைகள் நிறவேற்றப்படும் வரை எத்தனை நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்றனர் போராட்டத்தில் கலந்து கொண்ட கிராமிய அஞ்சலக ஊழியர்கள்.
இரா.பகத்சிங்