Skip to main content

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு - திட்டமிட்டபடி கடையடைப்பு!

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
bandh


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் இருந்து ரயில் மூலம் சனிக்கிழமை அதிகாலை சிதம்பரத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் முதல் நிகழ்வாக சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமி சகஜானந்தா மணிமண்பத்திற்கு காலை 9.45 மணிக்கு சென்று சாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 20 நிமிடம் அவரது சிலையின் அருகே தியானத்தில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து 11 மணிக்கு அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
 

bandh 2


இந்தநிலையில் ஆளுநர் வருக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் வர்த்தக சங்கம், நகரத்தில் சாலைகளில் புழுதி பறந்து மோசமான நிலையில் உள்ளது. சிதம்பரம் நகரத்தில் நடைபெற்று வரும் பாதள சாக்கடைபணிகள் தரமற்ற முறையில் செயல்படுகிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி வட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாமல் கொள்ளிடம் ஆறு, வெள்ளாற்றில் தடுப்பனை கட்டவேண்டும் உள்ளிட்ட சிதம்பரம் பகுதி மக்களின் வாழ்வாதர பிரச்சனைகள் ஆளுநரின் நேரடி கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

சார்ந்த செய்திகள்