Published on 13/05/2019 | Edited on 13/05/2019
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். பேராசிரியர் முருகனும் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 30.5.2019க்கு ஒத்திவைத்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 3 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். பேராசிரியர் முருகனும் ஆஜரானார். இதை தொடர்ந்து வழக்கை 30.5.2019க்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
