Skip to main content

விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் ரம்மி விளையாடிய அதிகாரிகள்!

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்ட அமளிக்கிடையே அதிகாரி ஒருவர் செல்போனில் ரம்மி விளையாடிய காட்சி,விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள் மட்டும் அனைத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் வேதனையுடன் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகளை விவாதித்துக்கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் சிலர் தங்களுக்கும் கூட்டத்துக்கும் சம்மந்தம் இல்லாதது போல் செல்போனில் வாட்ஸ்அப், பேஸ்புக், பார்த்துக்கொண்டிருந்துனர். அதிலும் ஒரு அதிகாரி இவர்களுக்கு எல்லாம் மேலாக மும்முரமாக ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார்.

விவசாயிகளின் குறை நிறைகளை கேட்டு அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதி்காரிகளோ தங்களுக்கும் கூட்டத்திற்கும் எந்த சம்மந்தம் இல்லாதது போல் அலட்சியமாக செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த இந்த சம்பவம் விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்